புதன், ஜனவரி 11, 2012

ஸாரி மேடம் ………….. 10.




ஒரு பொண்ண காதலிச்சன். அந்த பொண்ணு திடீர்ன்னு வந்து நாம பிரிஞ்சிடலான்னு சொன்னா அந்த கோபம் தான். என்னால அவளை மறக்க முடியல அதனால தான் படிக்க விரும்பம்மில்லன்னு சொன்னன் என இழுத்தேன். 

சைலண்டாக தலையை குனிந்தவர். காதலிக்கற அளவுக்கு நீ வளர்ந்துட்டன்னு இப்பதான்ப்பா தெரிஞ்சிக்கிட்டன்.

பீP.டி சார் உள்ளே வர, அவரிடம் அந்த பொண்ணு பிரிஞ்சிடலாம்ன்னு சொல்லுச்சாம். அந்த ஆத்திரத்தல அவர்க்கிட்ட கோபமா பேசிட்டன்னு சொல்றான் சார் என நிறுத்தியவர் அவனுக்கு கல்யாண ஆசை வந்துடுச்சி போல படிக்க விருப்பம்மில்லன்னு சொல்றான். கூப்ட்டும் போய் எங்க அக்கா பொண்ணு இருக்கு கட்டி வச்சிடறன் சார் என்றார். 

நீங்க வேற என பதறிய பி.டி சார். இந்த வயசுல எல்லா பசங்களுக்கும் வர்றது தான் சார். அதப்பத்தி எடுத்துச்சொன்னா கேட்டுக்க போறான். இன்னும் பள்ளிக்கூடம் 2 மாசம் தான் அதுக்கப்பறம் எக்ஸாம் வந்துடும். ர்pசல்ட் வந்ததும் வெளியூர்ல சேர்த்து படிக்கவையுங்க கல்யாணம் அதுயிதுன்னு அவன் வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிடாதிங்க என்றார். 

அப்பா வேண்டா வெறுப்பாக சலிப்பான குரலில் பாக்கலாம் சார் என்றார். 

படிப்போட அருமை அவனுக்கு இன்னைக்கு தெரியாது. நீங்க தப்பா முடிவு எடுத்து அவனை பள்ளிக்கூடம் விட்டு நிறுத்தாதிங்க. ஸ்கூல்க்கு வரட்டும் அவனை நான் பாத்துக்கறன். நீங்க எச்.எம் ரூம்க்கு வந்து ஒரு மன்னிப்பு கேட்டுடுங்க என எழுந்தார். 

தளர்ந்து போன நடையில் முகத்தில் சோகத்துடன் எச்.எம் முன் வந்தார். அவனை மன்னிச்சிடுங்க சார் ஏதோ தெரியாம பண்ணியிருக்கான் என்றார் அப்பா. 

முன்ன அப்படி பேசனிங்க. 

ஒரே பையன் சார். நானே அவனை திட்டியிருக்கேனே தவிர அடிச்சதில்ல என்க்கிட்ட அடிச்சன்னு சொன்னிங்களா பெத்த பாசம் சார் என்றார் தாழ்ந்த குரலில். 

ம். 

பின்னால் நின்றிருந்த நானும் ஸாரி சார் என்றேன். 

ம். ஒழுங்கா போய் படிக்கற வேலையப்பாரு. 

நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தோம். 

பீ.டி சாரிடம், இவனை பாத்துக்குங்க சார் என்றவர் என்னிடம் 20 ரூபாய் தந்து மதியம் சாப்பிடு எனச்சொல்லிவிட்டு புறப்பட்டார். 

பீ.டி சார் அவரது ரூம்க்கு என்னை அழைத்து சென்றவர். 

ரூம்க்குள் நுழைந்ததும் என்னடாச்சி ?.

நடந்ததை சொன்னேன். முழுவதும் கேட்டவர் 

எந்த பொண்ணும் பிரியற முடிவு தான் எடுக்கும். அந்த பொண்ணும் சரியா தான் முடிவு எடுத்துயிருக்கு. கவலைப்படாத. இந்த வயசுல எல்லார்க்கும் ஒரு ஈர்ப்பு வரும் அது வயசு கோளாறு. அதுக்கு பேர் காதல்யில்ல. ஆனா அதை காதல்ன்னு தப்பா எடுத்துக்கிட்டு படிப்ப கெடுத்துக்கிட்டு, குடும்பத்த எதிர்த்து வீட்ட விட்டு ஓடிப்போய் வாழ்க்கையை கெடுத்துக்கறாங்க. நீயும் அப்படி போயிடாத. அதோட நீ காதலிக்கறன்னு சொன்னதுக்கு வேற அப்பாவா இருந்தா இன்னேறம் அடிச்சி உதைச்சியிருப்பாங்க. உங்கப்பா டீசன்டா உலகத்த புரிஞ்சி நடந்துக்கறாரு. உன்ன யார்க்கிட்டயும் விட்டு தரல. அவருக்கு நல்ல பிள்ளையா நடந்துக்க. ஸ்கூல் வந்து ஓழுங்கா படி, டிகிரிய வேற எங்கயாவது போய் படி. விழா காலத்துல மட்டும் ஊருக்கு போ. மஞ்சுவ மறக்கப்பாரு என்றதும். 

திடுக்கிட்டு அவள்னு எப்படி தெரியும் என குழப்பத்தோடு அவரை பார்த்தேன். என் பார்வையை புரிந்துக்கொண்டு பசங்க சொன்னானுங்க. அந்த பொண்ணுக்கிட்ட மறந்துடறன்னு சொல்லு. அப்பத்தான் அந்த பொண்ணும் நிம்மதியா இருக்கும். இரண்டு பேருக்குமே பேசனது, பழகனத மறக்கறது கஸ்டம்மா தான் இருக்கும். அதுக்காக அதையே நினைச்சி மனச போட்டு குழப்பிக்காத. ஒழுங்கா படிக்கற வேலையப்பாரு. உன் நல்லதுக்கு சொல்லிட்டன் அதுக்கப்பறம் உன் விருப்பம்போல செய் என பேசி முடித்தார். 

அமைதியாக நின்றேன்.  

சரி க்ளாஸ்க்கு போ, சாயந்திரம் க்ரவுண்ட்ல பாக்கறன் என்றார். 

வகுப்புக்கு வந்தேன். மற்றவர்கள் என்னை வித்தியாசமாக பார்ப்பதாக பட்டது. 

உட்கார்ந்ததும் ஸாரி மச்சான் என்றான் ஜான். 

ம் என தலையாட்டினேன். மனம்மோ, படிச்சி நல்லதா ஒரு வேலைக்கு போறவறைக்கம் காத்திருப்போம். அவள் காத்திருந்தா கல்யாணம் இல்லைன்னா…….. இல்லைன்னா என அடுத்து யோசிக்க மனம் மறுத்தது. 

லஞ்ச் டைமில் மஞ்சுவை தேடிச்சென்றேன். அவளும் தேவியும் அமர்ந்திருந்தனர். அருகே சென்ற நான் மஞ்சு முன் தலை குனிந்து உன்னை இனிமே தொந்தரவு பண்ணமாட்டன். நீங்க தைரியமா இருக்கலாம், நல்லா படிங்க எனச்சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் திரும்பி நடந்தேன். தேவி பின்னாடியே ஓடிவந்தவள் ஏய் என்ன இப்படி பண்ணிட்ட என்றாள். 

அவ தான் அந்த முடிவுக்கு முதல்ல வந்தா. அவ நினைக்கறதும் சரிதான். அவுங்கப்பா தூக்கு போட்டுக்கிட்டவற காப்பாத்தனாங்க. எங்க காதல் தெரிஞ்சி வேற ஏதாவது முடிவு எடுத்த நல்லாயிருக்காது. அந்த பழியும், பாவமும் எனக்கு வேணாம். அது அவளையும் தான் பாதிக்கும். ஊர்ல கடைசி வரை அவளை தான் திட்டுவாங்க. அவளை திட்டனா சத்தியமா எனக்கு வலிக்கும். அதனால இப்பவே இதுக்கு ஒரு முடிவு செய்துட்ட நல்லாயிருக்கும் அதான் அவ எடுத்த முடிவுக்கு கட்டுப்பட்டுட்டன். நானே நல்லா யோசிச்சி தான் இந்த முடிவ எடுத்தன். நான் காதலிச்சன்னு எங்கப்பாவுக்கு தெரியும், ஆனா யார்ன்னு தெரியாது. தெரிஞ்சா வேற ஏதாவது பிரச்சனை வந்துட்டா அதான் சொல்லல. எனக்கு மனசு கஸ்டமாதான் இருக்கு தேவி. ஆனா இந்த முடிவுக்கூட அவ நல்லதுக்காக தான் எடுத்தன். இன்னும் காலம்மிருக்கு. பாத்துக்கலாம் எனச்சொல்லிவிட்டு அவளை பாத்துக்க, நல்லவ அவ எனச்சொல்லிவிட்டு நடந்தேன். 

பள்ளி விட்டு இரவு வீட்டுக்கு வந்ததும் அம்மா, யார்ரா அந்த பொண்ணு என கோபமா வெடித்தார். 

……………….

கேட்கறன்யில்ல வாய்ல என்ன கொழுக்கட்டையா.

விடும்மா. அந்த பொண்ணு வேணாம்ன்னிட்டா. நானும் ஒத்துக்கிட்டன். இதுக்கு மேல எதுவும் கேட்காத என்றேன் சலிப்பான குரலில். 

அங்கதான் கேட்கள இங்கயாவது கேளுங்களேன் ?. 

தோல்க்கு மேல வளர்ந்தாச்சி. இனிமே என்னத்த கேட்கறது. அடிச்சி உதைக்கற வயசா அவனுக்கு. நல்லது கெட்டது அவனுக்கே தெரியும் நான் என்ன சொல்றது என திண்ணைக்கு போனார். அன்று முதல் நான் வீட்டில் இருந்தாள் அவர் திண்ணையிலும், நான் திண்ணையில் இருந்தால் அவர் வீட்டுக்குள் இருப்பதுமாக மாறியது. 

வகுப்பு, கிரவுண்ட் என ஓடியது. அவளின் எண்ணம் அடிக்கடி மனதில் வந்து இம்சித்தபடியே தான் இருந்தன. அந்த நேரத்தில் எண்ணத்தை மாற்றிக்கொள்ள சிரமப்பட வேண்டியதானது. இரண்டு முறை மஞ்சுவிடம் சில வார்த்தைகள் தேவிக்காக பேசவேண்டியதானது. பப்ளிக் எக்ஸாம் நெருங்க நெருங்க கிரவுண்ட் போவது நின்று போனது. வகுப்பின் கடைசி நாளன்று ஸ்கூலில் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தோம். மைக் பிடித்த எச்.எம் என் பெயரை சொல்லி, அவனை மாதிரி உருப்படாதவங்க சிலப்பேர் தான் இந்த பேட்ச்ல இருந்திங்க. மத்தப்படி எல்லாம் நல்ல பசங்க தான். நீங்க நல்ல படிச்சி பெரிய ஆளா வரனும் என்றார். கடைசி பரிச்சை முடிந்ததும் பி.டீ சார் ரூம்க்கு போனேன். 

நல்லா எழுதியிருக்கியா ?

எழுதியிருக்கன் சார். 

லீவுல சும்மாயிருக்காம ஏதாவது டைப்ரடிங் கத்துக்க கம்ப்யூட்டர் கோர்ஸ் சேரு, தினமும் க்ரவுண்ட்க்கு வந்து ப்ராக்டிஸ் பண்ணு. 

சரி சார். 

வெளியே வந்தேன். வெளியே நின்றிருந்த ஜானும் நானும் நடக்க லீவுல என்ன மச்சான் பண்ண போற. 

தெரியலடா

எங்க போறதாயிருந்தாலும் கூப்டு மச்சான் நானும் வர்றன். 

ம். கிளம்பட்டா?

வீட்ல போய் என்ன பண்ணபோற. எங்க வீட்டுக்கு வா போலாம். 

இல்லடா அப்பறம் வர்றன். என்ன பஸ் ஸ்டான்ட்ல ட்ராப் பண்ணு என அவனுடன் கிளம்பினேன். 

பஸ்சில் வரும்போது மனமோ அடுத்து என்ன என்ற கேள்வியே எதிர்நோக்கியிருந்தது. 

தொடரும்………


குறிப்பு - இக்கதையை தொடர்ந்து வாசித்து வரும் சில நண்பர்கள் தலைப்பை மாற்றக்கோரியதால் அடுத்து வரும் பகுதியில் இருந்து  சுகமான சுமைகள்........... என்ற தலைப்பில் இத்தொடர் கதையை வெளியிடவுள்ளேன். தொடர்ந்து வாசிக்கவும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக